சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கடுமையாக குற்றம் சாட்டி விமர்சித்திருந்தார்.

இதற்கு  தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,, கிரண்பேடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று புதுவை ஆளுநர் அலுவலகத்தை புதுச்சேரியை சேர்ந்த திமுகவினர்  முற்றுகை போராட்டம் நடததினர்.

மேலும்,கிரண்பேடி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்குமாறு திமுக உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில்  கிரண்பேடி பேசியது தொடர்பாக மக்களவையில் திமுக ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இன்று மக்களவை கூடியதும், கிரண்பேடியின் நடவடிக்கை குறித்து  திமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். கிரண்பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு முழக்க மிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் இருந்தது.

கிரண்பேடி குறித்து மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு பேசிய போது கூச்சல் குழப்பம் எழுப்பினர். அவர்களிடம் டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார். இதனால்  மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.