டில்லி
திமுக நாடாளுமன்ற தலைவர் திருச்சி சிவா வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் தொடர் எதிர்ப்பு நிலவி வருகிறது. டில்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் அதை ஒடுக்க மத்திய அரசு கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. மாநிலங்களவை திமுக தலைவர் திருச்சி சிவா இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிற்கும் விவசாயிகள் ஆதரவாகவும், பெகாசஸ் விவகாரம் , விலைவாசி உயர்வு குறித்து என எதைக் குறித்தும் விவாதிக்க, பேசத் தயாராக இல்லை.
மத்திய அரசு நாடாளுமன்ற அவைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும், அந்த சட்டததை மக்களே எதிர்க்கிறார்கள் என்றால் அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதைச் செய்ய மத்திய அரசு மறுக்கிறது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.