டெல்லி: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா. நேற்று முன்தினம் துணை குடியரசுதலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளரான மார்க்கரெட் ஆல்வா வேட்புமனுத் தாக்கலின்போது உடனிருந்தார். மேலும், அவை நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டார். இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel