சென்னை: திமுக எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையடுத்து தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று புதிதாக 6,984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,47,129 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிக பட்சமாக சென்னையில் 2,482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,69,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், மாநில முழுவதும் 46,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா உறுதிப்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.