சோஹ்னா: அரியானா மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி இன்று இணைந்து, பாதயாத்திரை மேற்கொண்டார்.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை என்ற ஒற்றுமை யாத்திரை, மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 7ந்தேதி குமரியில் தமிழக முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.  இந்த யாத்திரை,  தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என பல மாநிலங்களை கடந்து தற்போது அரியானாவில் நடைபெற்று வருகிறது. நாளை தலைநகர் டெல்லிக்குள் புக இருக்கிறது.

இநத் நிலையில், ராகுலின் இன்றைய யாத்திரை,  டிசம்பவர் 21ந்தேதி  105 வது நாளில்  அரியானாவில் நுழைந்தது. இன்று 107வது நாளாக  ஹரியானாவின் சோஹ்னாவில் உள்ள கெர்லி லாலாவில் இருந்து மீண்டும் யாத்திரை தொடங்கியது. இன்றைய யாத்திரையும் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். அவர் ராகுல்காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  மேலும், ஏராளமான கட்சி தொண்டர்கள்,  பதாகைகள் மற்றும் கட்சி கொடிகளை ஏந்தியவாறு ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டனர்.  இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் அல்லது யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்துவதற்கு சாக்குப்போக்குகள் கூறுவதாகவும், இந்தியாவின் உண்மையைக் கண்டு மத்திய அரசு பயப்படுவதாக ராகுல் குற்றம் சாட்டினார்.

ராகுலின் பாதயாத்திரை நாளை (24ந்தேதி) தலைநகர் டெல்லிக்குள் புக உள்ளது. டெல்லியில் பிரமாண்டமாக யாத்திரை செல்ல ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.