சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்பா எடுத்துச்சென்ற விவகாரம் குறித்து, சட்டசபை உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடரின்போது, தமிழகத்தில், , தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி, அவற்றை தி.மு.க., உறுப்பினர்கள் அவைக்குள் கொண்டு சென்றனர். சபாநாயகரின் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பொருட்களை சபைக்குள் எடுத்துச்சென்றது, உரிமை மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க ஸ்டாலின் உள்பட தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில், உரிமைக்குழுவின் நோட்டீசை ரித்து செய்த உயர்நீதிமன்றம் விதிமுறைகளை பின்பற்றி புதிய நோட்டீசை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டது. அதையடுத்து, புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.