சென்னை:
நாளை ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது.

அறிவாலயத்தில் உள்ள அரங்கில், இன்று காலை 10.30 மணிக்கு நடக்க உள்ள இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, அவர் கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், இன்றைய கூட்டத்தில், அவர் வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேச ஏற்பாடு செய்யப்படலாம் என்றும், இல்லையெனில், பொதுச் செயலர் துரைமுருகன் தலைமையில் கூட்டம் நடக்கும் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]