சிவகங்கை: ரூ.1.20 கோடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் பெரியகருப்பனை விடுவித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திமுக அமைச்சர் பெரிய கருப்பன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் சிவங்கை நீதிமன்றம் விடுவித்தது குற்றம்சாட்டப்பட்ட வர்கள் மீதான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

திமுக ஆட்சியில், திமுக அமைச்சர்கள் ஊழல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவது வாடிக்கையாக உள்ள நிலையில், தற்போது திமுக அமைச்சர் பெரிய கருப்பன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு காவல்துறை, குற்றத்தை நிரூபிக்க தவறியதால், இவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனதவே இதுபோன்று பலர் ஊழல் வழக்குகளில் விடுவிக்கப்படுவதை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காவல்துறையை பச்சோந்தி போல செயல்படுவதாக கூறியதுடன், பல கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திமுக அமைச்சர் பெரிய கருப்பன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விடுக்கப்பட்டு உள்ளார்.
இவர் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் எம்.எல்.ஏவாகவும் கே.ஆர்.பெரியகருப்பன், இருந்தார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ.1.20 கோடி அளவில் சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் அவரது தாயார் கருப்பாயி அம்மாள், மனைவி பிரேமா, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் காவல்துறை, அவர்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியதால் அமைச்சர் பெரிய கருப்பன் உள்பட அவரது குடும்பத்தினர் என அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனது குடும்பத்தினருடன் ஆஜரான அமைச்சர் பெரியகருப்பன் திரும்ப சென்றார். தற்போது கே.ஆர்.பெரியகருப்பன் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.