சென்னை: சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை திமுக நாளை வெளியிடுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று கட்சியின் அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து நாளை திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வாக்குறுதிகள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளன.
Patrikai.com official YouTube Channel