சென்னை: திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று காலை அறிவித்தபடி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. வரும்  12 முதல் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னதாக கூட்டணி, தொகுதி உடன்பாடு மற்றும் வேட்பாளர்களையும் தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியதுடன், அவர்களிடம் நேர் காணலை தொடங்கி உள்ளது.

திமுக சார்பில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியுள்ளது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்ளிட்டோர் நேர்காணலை நடத்துகின்றனர்.

முதல்நாள இன்று  காலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய  5 மாவட்டங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.சேர்ந்த சுமார் 400 நபர்களுக்கு இன்று காலை அழைப்பு விடுக்கப்பட்டது. அதையடுத்து நேர் காணலுக்கு வந்தவர்களிடம் விறுவிறுப்பாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இன்று பிற்பகல்,  விருதுநகர், சிவகங்கை, தேனீ உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தொடங்கும் நேர்காணல் வரும் சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது.

மார்ச் 3ந்தேதி:  (நாளை), புதன் காலை 9 மணி- மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு.

மாலை 4 மணி- திருப்பூர் மத்திய, வடக்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு.

மார்ச் 4ந்தேதி காலை:  வியாழன் காலை 9 மணி – தருமபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய புதுக்கோட்டை வடக்கு, தெற்கு.

மாலை 4 மணி – கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு.

மார்ச் 5 காலை 9 மணி – தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு விழுப்புரம் வடக்கு,

 மாலை 4 மணி – திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு.

மார்ச் 6ந்தேதி  காலை 9 மணி – திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு சென்னை மேற்கு, தென்மேற்கு.

மார்ச் 6ந்தேதி  மாலை 4 மணி – புதுச்சேரி, காரைக்கால் சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.