சென்னை:

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அவருடன் போனில் பேசி நலம் விசாரித்ததாக தெரிவித்து உள்ளார்.

தமிழக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு காய்ச்சல் இருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர்,  தனக்கு இருந்த காய்ச்சல் சரியாகி விட்டது, நலமாக இருக்கிறேன்,  தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வில்லை என்றும், தனிமைப்படுத்தபடவும் இல்லை என்றும், வீட்டில் வழக்கம்போல இருப்பதாகவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  ‘உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே.பி. அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டி ருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் என்று மு.க.ஸ்டாலின் டிவிட் போட்டுள்ளார்.

அதில்,

உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே.பி.அன்பழகன் அவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.