டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் வஃபு வாரிய திருத்த மசோதா உள்பட பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், மத்தியஅரசு  நடத்த உள்ள  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில், விவாதிக்க வலியுறுத்தி  திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கும் என  தகவல்கள் பரவி வரும் நிலையில்,  மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, அதுகுறித்து  விவாதம் நடத்த கோரி திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.