சென்னை: திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது உறுதி  என  பேரவையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டுகாங்கிரஸ் தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், செல்வபெருந்தகை திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்,  ஆட்சியை பாராட்டி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்  பிப்ரவரி 17ந்தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இண்டி  கூட்டணியை சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் , இன்று பட்ஜெட்  மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்றும், நாளையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க உள்ளனர்

இன்று  பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முன்பு கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை கோரிக்கை ஒன்று வைத்தார்.  அவர் பேசுகையில்   நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்.

தொழிற்சாலைகள் நிறைந்த திரும்பெரும்துறை தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது. நீங்கள் மீண்டும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது உறுதி என்பது தமிழ்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட்டு விட்டது. இருந்தபோதிலும் இந்த தேர்தலுக்கு முன்பாக எந்தெந்த சாலைகள் செப்பனிட வேண்டுமோ, பழுது பார்க்க வேண்டுமோ அதை பார்த்து தருவார்களா என்று கேட்க விரும்புகிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு , என்னுடைய அருமை சகோதரர் செல்வப்பெருந்தகை கேட்டுள்ள கோரிக்கை சரியானது. காரணம் அந்த பகுதியில் தான் இன்றைக்கு நிறைய தொழிற்சாலைகள் உள்ளது. நானே அந்தப்பகுதியில் அடிக்கடி வருவேன். அந்த அடிப்படையில் தான் காஞ்சிபுரத்தில் இருந்து நேரடியாக வண்டலூர் வரும் பகுதியில் பழுதடைந்து இருந்தது. அதனை நானே நேரடியாக பார்த்து இந்தாண்டே நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இன்னொன்று படப்பையில் பாலம் ஒன்று கட்டிக் கொண்டிருந்தோம். அதனை கட்டாயம் சீக்கிரம் முடித்து தர வேண்டுமென்று இதே மாமன்றத்தில் கோரிக்கை வைத்தார்கள். அதையும் அவருடைய திருக்கரத்திலே திறந்து வைத்தோம்.

தற்போது அவர் வைத்துள்ள கோரிக்கை நியாயமானது. எனவே முறைப்படுத்தி என்னிடம் கடிதம் கொடுக்கும்போது, தேர்தலுக்கு முன்பாக என்ன செய்ய முடியுமோ அதனை முறைப்படி செய்கிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் அடுத்த நிதியாண்டில் தான் செய்ய முடியும். இவ்வாறு செல்வப்பெருந்தகை வேண்டுகோளுக்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகைஇன்று சட்டசபையில்  பேசிய  திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சிக்கு வருவது என்பது மக்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது, என்று கூறியது, மீண்டும் தமிழ்நாட்டில்,  திமுக ஆட்சிதான் அமையும் என்பதையும், காங்கிரஸ் கட்சி திமுகவுடன்தான் கூட்டணி என்பதையும் உறுதிபடுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் இன்று குரியன் அறிக்கையை தாக்கல் செய்து பேசும்போது, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என கூறி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அதாவது,  மாநிலங்கள் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என கூறி  தமிழ்நாட்டில் கூட்டாட்சிக்கு வாய்ப்பே இல்லை என்பதை ஸ்டாலின் உறுதியாக கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]