சென்னை:
தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலை நாளை மாலை 5 மணிக்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, சட்டமன்றத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் பெரும்பான்மைய நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டால், திமுக நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel