சென்னை:
ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக வழக்கு ஜூன்-16 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் முடிவு செய்வார் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் சபாநாயகர், மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரையிலோ அல்லது சபாநாயகர் முடிவெடுக்கும் வரையிலோ அந்த 11 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது