சென்னை:

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதுபோல, மக்களவத் தலைவர் ஓ.பிர்லா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

வயது முதிா்வு காரணமாக அப்போலோவில்  சிகிச்சை பெற்று வந்த க.அன்பழகன், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அன்பழகன் மறைவுக்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் பல தலைவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அன்பழகன் மறைவு குறித்து அவரது அவரது மகன் அன்புச்செல்வனுக்கு எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தங்களது தந்தையார் பேராசிரியர்  மறைவுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன்….உங்களுடைய துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்… என்னடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..  அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திறேன் என்று தெரிவித்து உள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவுக்கு மக்களவைத்தலைவர் ஓ.பிர்லா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில்,

நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினரும் முதுபெரும் அரசியல் தலைவரும், சிறந்த நிர்வாகியும் தி.மு.க பொதுச்செயலருமான திரு க. அன்பழகன் அவர்களின் மறைவு குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“மூத்த அரசியல்வாதியான பேராசிரியர் அன்பழகனின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அன்பழகன் ஆற்றிய பணிகளை மறக்க முடியாது. அவரின் மறைவு தமிழகத்திற்கும், திமுகவிற்கும் பேரிழப்பு”.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.