சென்னை: திமுக பொதுக்குழு எதிரொலியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஷெனாய் நகர், திருமங்கலம், டி.ஜி.எஸ் தினகரன் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
ஷெனாய் நகர், ஈ.வி.ஆர்.சாலை – காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் ஈ.வி.ஆர். சாலையில் அண்ணா வளைவில் இருந்து ஈகா சந்திப்பு நோக்கி சிறு மற்றும் கனரக வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் 3வது அவென்யூ, அண்ணாநகர் ரவுண்டானா, K4 அண்ணாநகர் P.S, 3வது அவென்யூ, புதிய ஆவடிசாலை சந்திப்பு, நியூ ஆவடிசாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை மற்றும் ஃப்ளவர்ஸ் சாலை வழியாக ஈ.வே.ரா சாலையை அடையலாம்.
ஈ.வே.ரா சாலையிலிருந்து வெளியேறும் அனைத்து வணிக வாகனங்களும் ஈகா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருசாமி பாலம், ஸ்டெர்லிங் சந்திப்பு, ஸ்டெர்லிங் சாலை வழியாக செல்லலாம். தேவைப்படின் கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
பொது வாகனங்கள் (உள்வரும் திசை) புல்லா அவென்யூ சந்திப்பில் திரு வி க பார்க், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை வழியாக செல்லலாம். பொது வாகனங்கள் (வெளியே செல்லும்) ஈ.வே.ரா சாலை, டெய்லர்ஸ் சாலை சந்திப்பில் டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியூ ஆவடி சாலை மற்றும் ஹால்ஸ் சாலை புல்வா அவென்யூ வழியாக ஈ வே ரா சாலையினை அடையலாம்.
நியூ ஆவடி சாலை, ஹால்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாது. நியூ ஆவடி சாலையில் இருந்து டெய்லர்ஸ் சாலையை நோக்கி ஹால்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்ல இயலாது.
சேத்துப்பட்டு சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சாலையில் வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம் சந்திப்பிலிருந்து ஈ.வே.ரா சாலையை நோக்கி அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் நமச்சிவாயபுரம் பாலம், சூளைமேடு, என்.எம்.ரோடு வழியாகச் செல்லலாம். N.M.சாலையி;y இருந்து வரும் வாகனங்கள் நமச்சிவாயபுரம் சந்திப்பிலிருந்து ஈ.வே.ரா சாலை நோக்கி அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் நமச்சிவாயபுரம் சந்திப்பில் இருந்து ஹாரிங்டன் சுரங்கப்பாதை மற்றும் சேத்துப்பட்டு சந்திப்பு நோக்கிச் செல்லலாம்.
எஸ்டேட் ரோடு, திருமங்கலம் – காலை 6 மணி முதல் 9 மணி: திருமங்கலத்திலிருந்து எஸ்டேட்ரோடு கோல்டன் பிளாட் வழியாக அம்பத்தூர், ஆவடி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் பாடி மேம்பாலம் TVS லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக செல்ல வேண்டும்.
திருமங்கலத்திலிருந்து JJ நகர் முகப்பேர் மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் வளையாபதி சாலை வழியாக வலது புறம் திரும்பி PARI சாலை வழியாக வலது புறம் திரும்பி திருவள்ளூர் சாலை வழியாக செல்லலாம். ஆவடி, அம்பத்தூர் OT யிலிருந்து கோல்டன் காலனி வழியாக திருமங்கலம் அண்ணாநகர் செல்லும் வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் TVS லூக்காஸ் பிரிட்டானியா கம்பெனி வழியாக 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும்.
எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – காலை 5 மணி முதல் 8 மணி வரை: லைட் ஹவுஸில் இருந்து சாந்தோம் ஹை ரோடு மற்றும் மந்தவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலை, அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கெனால் பேங்க் ரோடு சந்திப்பில் இருந்து திரு.வி.க பாலத்திற்கு அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக வலது பக்கமாக திரும்பி மந்தவெளி சென்றடையலாம். போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்றாற்போல் தடுப்புகள் மற்றும் கூம்புகள் வைக்கப்படும்.
கிரீன்வேஸ் சாலையில் இருந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆர்.கே.மட் ரோடு வழியாக பிராட் கேஸில் சாலை வழியாக அடையார் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது, டிஜிஎஸ் தினகரன் சாலை முதல் டி.வி.கே பாலம் வரை சென்று வலது பக்க உள் பாதையில் சென்று மந்தவெளியை அடையலாம். போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்றாற்போல் தடுப்புகள் மற்றும் கூம்புகள் வைக்கப்படும்.
திரு.வி.க பாலத்தில் இருந்து 3வது அவென்யூ மற்றும் 2வது அவென்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்கள் எம்எல் பூங்காவில் திருப்பி விடப்படும் பின்னர் இடதுபுறம் திரும்பி எல்பி ரோடு சாஸ்திரி நகர் 1வது அவென்யூவில் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் (எம்டிசி பேருந்துகள் உட்பட) சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, பெசன்ட் நகர் 2வது அவென்யூ சந்திப்பு, வலதுபுறம், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, பெசன்ட் நகர் 2வது அவென்யூ வலதுபுறம் திரும்பி, பெசன்ட் நகர் 1வது அவென்யூ மற்றும் பெசன்ட் நகர் 2வது அவென்யூ, 7வது அவென்யூ சந்திப்பு, வலது, எம்.ஜி. சாலை, LB சாலை சந்திப்பிலிருந்து இலக்கை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.