தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனாவுக்கு பலியானார்…

Must read

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் பொதுமுடக்கத்தின்போது, நிவாரண பணிகளை மேற்கொண்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தொற்று பாதிப்புக்குள்ளாகி  வருகின்றனர்.

இந்த நிலையில்,  கொரோனா தொற்றுக்கு ஆளான தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்  சிகிச்சை பலனின்றி   இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை திடீரென ரகுமான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article