சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக்கோரி திமுக எம்.பி. கிரிராஜன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது ரெயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.  அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ரெயிலில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், நயினார் நாகேந்திரன , கேசவ விநாயகம் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அவர்மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே  கடந்த ஏப்ரல் 6, 2024 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் மூன்று நபர்களிடமிருந்து சுமார் ₹4 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் நைனார் நாகேந்திரன் மீது விரிவான விசாரணை நடத்தக் கோரி, திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) புகார்களைத் தாக்கல் செய்துள்ளது. அப்பணம் பாஜக தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவே கொண்டு செல்லப்பட்டதாக அந்த நபர்கள் கூறியது, தீவிர அரசியல் ஆய்வுக்கு வழிவகுத்துள்ளது.

[youtube-feed feed=1]