சென்னை:
ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கை வாயிலாக, மதசார்பற்ற அரசை மத்தியில் உருவாக்க திமுக உறுதியளிக்கிறது என்றவர், இந்த தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பி னர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், ஆன்லைன் மூலமாக தேர்தல் அறிக்கைக்கு ஆலோசனைகள், கருத்துகள் வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் தமிழை இணை ஆட்சிமொழியாக்க சட்டத் திருத்தம் செய்யப்படும்
மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும்
பொருளாதாரத்தை சீரமைக்க சிறப்பு அந்தஸ்துடன்கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்
சமையல் எரிவாயு மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் நிலை மாற்றப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்
கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை
தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இலங்கை அகதிகளுக்கு மேலும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்
மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
கீழடியில் அகழாய்வுகள் தொடரும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்
மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட ஒரு கோடி பேர் சாலைப்பணியாளர்களாக நியமிக்கப்படுவர்
10ம் வகுப்பு வரை படித்த சுமார் 50 லட்சம் பெண்கள் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்
உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்
மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்
கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்
கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில் அரை விழுக்காடு நிதி ஒதுக்கப்படும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்
சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை அனுப்பவர்களை தண்டிக்க தனிச்சட்டம்
நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்
குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்