சென்னை,

மூச்சு திணறல் காரணமாக இன்று காலை திமுக முன்னாள் அமைச்சரும், முதன்மை செயலாளருமான துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அப்பல்லோ  மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.   தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.