சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அரசு வந்த பிறகுதான சட்டமன்றம் கூடும். அதனால், தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று மாலை காணொளி காட்சி மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல், தேர்தல் பணிகள், பரப்புரை உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து, விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]