சென்னை:

மிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ரஃபேல் ஒப்பந்த பேரம் ஊழல் குறித்த ஆவனங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக மத்திய அரசு அவர்மீது தேசதுரோக வழக்கு போடுவதாக மிரட்டியது.  ஆனால், அதற்கு அசராத ராம் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்.

ரஃபேல் ஊழல் விவகாரம், நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்லில் மோடி அரசுக்கு கடுமையான தலைவலியை கொடுத்து உள்ளது. இதன் காரணமாக பாஜகவின்  வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், தனியர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராம்,  தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது, தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார். மேலும், செய்தியாளர்களின் வருமான வரித்துறை ரெய்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தமிழகத்தில் நடைபெற்ற  வருமான வரித்துறை சோதனைகள்  ஒருதலைப்பட்சமானது… இது கண்டனத்துக்குரியது என்று கூறினார்.

மேலும், இனிமேல் வர உள்ள தேர்தலில் ரஜினி போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளதை வரவேற்பதாக கூறியுள்ள ராம், . கமல்ஹாசன் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.