சென்னை:

திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை  அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படு கிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் இன்று மாலை  சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து கூட்டணி அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  கூட்டணி சம்பந்தமாக பலமுறை திமுக எம்.பி. கனிமொழி ராகுல்காந்தியை சந்தித்து பேசி உள்ளார்.

நேற்று  மாலை மீண்டும் ராகுலை கனிமொழி சந்தித்து கூட்டணி குறித்து இறுதி பேச்சு வார்த்தை நடத்திய கூறப்படுகிறது.

இதையொட்டி கூட்டணி உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்க இன்று மாலை 6 மணி அளவில் முகுல் வாஸ்னிக் சென்னை வருகிறார்.

தமிழகம்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும்  தமிழகம் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து இரு கட்சி தலைவர்கள் இணைந்து கூட்டணியை அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணியில்,  காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட  10 தொகுதி கள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர மேலும் சில கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளும் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.