கோவை:
மைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா – 6 ஆயிரம் பெயர்கள் மற்றும் செல்போன் எண் அடங்கிய பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதியும், அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் போட்டியிடுகிறார். அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களின் செல்போன் எண்களை வாங்கிக் கொண்டு, கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய 6 ஆயிரம் பெயர்கள் மற்றும் செல்போன் எண் அடங்கிய பட்டியலை திமுகவினர் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினரிடம் அளித்துள்ளனர். அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை ஆய்வு செய்து முன்கூட்டியே தடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் திமுகவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.