சென்னை:

மிழக தேர்தல் ஆணையர் மீது அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார்.  வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தப்படுகிறது என தேர்தல் ஆணையம் மீது செந்தில்பாலாஜி குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

இந்த நிலையில், கடைசிக்கட்ட தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்காமல்   தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும்  தெரிவித்தார்.