ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிச் சான்றிதழ் திமுக வேபாளர் சந்திரகுமார் பெற்றுள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வந்தார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று, 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
அதே வேளையில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24151 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். நோட்டா 6109 வாக்குகளை பெற்றது. தேர்தலில் திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுங்கரா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் திமுக வேட்பாளர் சந்திரகுமாரிடம் வழங்கினர்.