சென்னை,

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் பெருபான்மையினர் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

அப்போது சசிகலாவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களிக்க அதிமுக எம்எல்எக்களுக்கு பண பேரம் நடைபெற்றதாக கூறப்பட்டது.

ஆனால், அப்போது இதை மறுத்து வந்த நிலையில், தற்போது பணப்பட்டுவாடா குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கூவத்தூர் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஐகோர்ட் முதன்மை அமர்வில் முறையீடு செய்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோ குறித்து சிபிஐ விசாரிக்க திமுக எம்எல்ஏக்கள் முறையீடு செய்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க திமுக கோரிக்கை வைத்துள்ளது.

திமுகவின் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.