ஈரோடு
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக மற்றும் நாதக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள். ஆகும். எனவே முக்கிய வேட்பாளராக போட்டியிடும் திமுகவின் வி.சி.சந்திரகுமார் மற்றும் இவரை எதிர்த்து களம் இறங்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்..
ஏற்கனவே காங்கிரச் வசம் ஈரோடு கிழக்கு தொகுதி இருந்த நிலையில் 2026-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்த தொகுதியை காங்கிரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் திமுகவினர் தீவிரமாக இருந்தனர். இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர் மாற்றம் தி.மு.க.வினருக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக போட்டியில் இருந்து விலகி இருப்பது அதிமுக அடிமட்ட தொண்டர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தலைமையின் முடிவு என ஏற்றுக்கொண்டாலும், வரும் பொதுத்தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முழு மூச்சில் போராடும். அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக கூட்டணியும் இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளது..
இந்த தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. எனவே திமுகவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சி என்கிற இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இது மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து சில பொதுத்தேர்தல்களில் 4 முனை, மும்முனை போட்டிகளை பார்த்த வாக்காளர்கள் இந்த முறை இருமுனை போட்டியை சந்திக்க உள்ளனர்.