சென்னை:
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி சுமார் 50 சதவிகிதங்களுக்கு மேலான இடங்களை திமுக கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது. இது அதிமுகவினருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலஅதிமுக ஆட்சி மீதான அதிருப்தியை, தேர்தலில் மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் 3ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் சுமார் 80 சதவிகித இடங்களை திமுக கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இதுவரை வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளின்படி, 50 சதவிகிதத்திற்கு மேலான இடங்களில் திமுக வெற்றிக்கனியை சுவைத்து உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக திமுக நீதிமன்றங்களை நாடியபோது, தமிழக அரசு திமுக, உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு பயப்படுவதாக கூறி வந்தது. ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு அமோக வெற்றியை தந்துள்ளன. இந்த வெற்றி ஆளும் அதிமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே அடுத்த ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கருதப்படும் நிலையில், அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள அதிமுக தலைகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலை 11 மணி நிலரப்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகளில், திமுக: 21.36% இடங்களையும், அதிமுக: 14.37% இடங்களையும் கைப்பற்றி உள்ளதாக தேர்தல்ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தெரிவித்து உள்ளது.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில், திமுக 32.1% வெற்றியும், அதிமுக: 26.15 % வெற்றியும் பெற்றுள்ளதாக கூறி உள்ளது
கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் கட்சி சார்பற்று தேர்ந்தெடுக்கப்படுவது. கிராம ஊராட்சித் தலைவர்கள் 78.17 % முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 56.67 % முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
அதன்படி, தேர்தல் நடைபெற்ற மொத்தமுள்ள 5090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2273 இடங்களையும், அதிமுக கூட்டணி 2071 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 509 இடங்களை பிடித்துள்ளன.
மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 264 இடங்களையும், அதிமுக 235 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றி உள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் அதிமுக, திமுகவின் வெற்றியை தேர்தல் அலுவலர்கள் மூலம் தட்டிப்பறித்து வந்தாலும், மாநில மக்களிடையே அதிமுக அரசு மீதான அதிருப்தி இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் வெளிப்பட்டு உள்ளது.
பொதுவாக இதுபோன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும்கட்சிதான் வெற்றி பெறுவது வாடிக்கையானது. ஆனால், இந்த முறை தமிழக மக்கள் முதன்முறையாக ஆளும் கட்சிக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்து உள்ளனர். இது, ‘ அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழக மக்கள் தீர்மானித்து உள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பறைசாற்றி வருகின்றன.
இது ஆட்சியாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசின் மக்கள் மக்கள் விரோத செயலுக்கு தலையாட்டி பொம்மையாக செயல்படும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் சரியான சவுக்கடி கொடுத்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
DMK alliance wins more than 50% of seats in District Councils and nearing 50% in Union Councils. First time in Tamil Nadu, the ruling party losing big in Civic Polls ?!