சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 29 இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் என டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ந்து 5வது முறையாக அதே கூட்டணியை திமுக அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீக் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜீ நியூஸ் – மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், திமுக தலைமையிலான INDIA கூட்டணி 36 இடங்களைக் கைப்பற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 2 இடங்களில் அதிமுக கூட்டணியும், ஒரு இடத்தில் பாஜகவும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் 39 இடங்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் நிறுவனம் இணைந்த கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்து உள்ளது. அதாவது, திமுக கூட்டணி 30 இடங்களை பிடிக்கும் என தெரிவித்து உள்ளது. இதில், திமுக 18 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றிக்கனியை பறிக்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணி 4 இடங்கள், பாஜக கூட்டணி கோவை உள்பட 5 இடங்கள் வெல்லும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 26-29 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ளது.
மேலும் .பிஜேபி 2 முதல் 6 இடங்களிலும் அதிமுக 1 ஆமுதல் 3 இடங்களில் கைப்பற்றும் என்று என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பை பார்க்கும் போது அதிமுகவை விட பாஜக தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் அதிமுக இந்த முறை குறைவான இடங்களை மட்டும் தான் கைப்பற்றும் என தெரிகிறது.
தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார்..? இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு….