மயிலாடுதுறை: ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திமுக கூட்டணி கட்சிகளான  தி.க., திராவிடர் விடுதலை கழகம், வி.சி.க., கம்யூ.கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனம் விழாவில் கவர்னர் இன்று கலந்துகொள்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காததை கண்டித்து;ம,   தி.க., திராவிடர் விடுதலை கழகம், வி.சி.க., கம்யூ.கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் . இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

மயிலாடுதுறையில்420 ஆண்டுகால தமிழ்மரபு உள்ள மடமாக தருமபுரம் ஆதீனம் உள்ளது. இங்கிருந்து தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக ரதம் செல்வது வழக்கமான நடைமுறை. அதன்படி இந்த ஆண்டும்  தருமபுர ஆதீனத்தில் இருந்து ஞானரதம் ஒன்று இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி)  புறப்படுகிறது.  இந்த ரதத்தின் பயணத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.

தருமபுரம் ஆதீன்ம் நிகழ்ச்சிகளில் இதுவரை ஆளுநர் ஒருவர் அழைக்கப்படாத நிலையில், புதிய நடைமுறையாக இந்த முறை ஆளுநர் அழைக்கப்பட்டு இருப்பதை ஒரு தரப்பினர் சர்ச்சையாக்கி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  திக, விசிக உள்பட 13க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால், எதிர்ப்பை மீறி இன்று ஆளுநர் மயிலாடுதுறை வந்துள்ள நலையில்,  திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.