நெல்லை:

நெல்லை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,  எதிர்கட்சிகளின் கூட்டணி முரண்பட்ட கூட்டணி என்று கூறியவர்,  எதிர்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து குழப்பம் நீடித்து வருவதாகவும் கூறினார்.

நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஓட்டு வேட்டையாடி வரும் எடப்பாடி பழனிசாமி தற்போது நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, வள்ளியூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய எடப்பாடி, மத்தியிலும் மாநிலத்திலும் ஒருமித்த கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால்தான் தமிழகம் வளம்பெறும்  என்றவர்,  திறமையான பிரதமரான மோடி, அந்த பொறுப்பிற்கு மீண்டும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தற்போதைய தேர்தலில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள திமுக தலைமையிலான  கூட்டணி முரண்பட்ட கூட்டணி என்றவர், கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து இதுவரை முடிவு செய்ய முடியாமல் குழப்பம் நீடித்து வருகிறது என்று கூறினார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தை நிறைவேற்றி வருவதாக கூறிய எடப்பாடி, திமுக பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிடுகிறது என்று குற்றம் சாட்டினார்.