சென்னை:

மிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 8ந்தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று பட்ஜெட் விவாதத்துக்கு பதில் அளித்து ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

நேற்றைய விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் குளறுபடி நடைபெற்றது என எனக் குற்றம் சாட்டி தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டமன்றத்தில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. உறுப்பினர் பொன்முடி 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்க ஆயிரத்து 985 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதாகவும் 2018 – 19-ம் ஆண்டுக் கான இறுதி துணை மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 19 கோடியே 11 லட்சம் ரூபாய் என கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.

எப்படிப் பார்த்தாலும் 25 முதல் 30 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக வும் அவர் கூறினார்.