தி.மு.க  – அ.தி.மு.க கொடுத்த பணத்தை அநாதை ஆசிரமத்துக்கு அளித்த வாக்காளர்!

Must read

a
 
தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு வாக்களிபதற்காக கொடுத்த 7 ஆயிரம் ரூபாயை  அநாதை ஆசிரமத்துக்கு அளித்துவிட்டதாக ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் (Sri Raja) என்ற முகநூல் பதிவர் தெரிவித்திருக்கிறார்.
b
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தங்கள் சின்னத்திற்கு ஓட்டுப்போடுமாறு வலியுறுத்தி என் குடும்பத்தினருக்கு கொடுத்த பணம் மொத்தம் ரூபாய் 7000. அந்தப்பணம் அப்படியே அனாதை இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுவிட்டது அதுவும் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவின் பெயரிலேயே. ஊழல் செய்து சம்பாதித்த மக்களின் பணம் நியாயமாக எங்கு சென்றடைய வேண்டுமோ அங்கு சென்றுவிட்டது.   – இராதாகிருஷ்ணன் ஒட்டன்சத்திரம்”

More articles

Latest article