திருச்சி: திருச்சி அருகேஉள்ள சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி நடைபெறும் தி.மு.க. 12-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்கிற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாநாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும், கூட்டணி அமைத்தும், பொதுமக்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தேர்தலை எதிர்கொள்ள கட்சியனர் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுக சார்பிலும் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, திமுகவினரை பட்டை தீட்டி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்காக மகளிர் மாநாடு, மாணவரணி கூட்டம், இளைஞரணி மாநாடு என பல மாநாடுகளை நடத்தி வருகிறார்.
அதன் தொடரச்சியாக தி.மு.க. மாநில மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் திமுக உற்சாகப்படுத்டதி வெற்றிக்கனிகளை பறிக்க ஆயத்தமாகி வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் வருகிற 9-ந்தேதி “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்கிற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இநத தி.மு.க.வின் 12-வது மாநில மாநாடு 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 200 ஏக்கரில் மாநாட்டு திடலும், மீதமுள்ள 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடங்கள், சமையல் கூடம் உள்ளிட்ட இதர பிற வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது.
இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேரை திரட்டும் நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றித்தரும் வகையில் நடைபெறும் பணிகளை மாவட்ட அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மாநாட்டுத் திடல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கட்சியினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த மாநாட்டிற்கு தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி எழுச்சியுரையாற்றுகிறார். முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றுப் பேசுகிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். மாநாட்டில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, திருச்சி சிவா ஆ.ராசா, கனிமொழி எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் தாயகம் கவி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய அலுவலக செயலாளர் துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின், தலைமை நிலைய அலுவலக செயலாளர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைர மணி, காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.
[youtube-feed feed=1]