சென்னை:

சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும், லாரி ஏறியதும் விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா (அண்ணியார்) பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணணிக்கு எவ்வளவு ஞானம் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளூரில் நடைபெற்ற விஜயகாந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், கலந்து கொண்ட தேமுக பொருளாளர் பிரேமலதா, சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதி…என்றார்.

அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் பள்ளிக்கரனை பகுதியில் சாலையின் நடுவே வைத்த வரவேற்பு பேனர் காற்றில் சாய்ந்து,  அப்போது  சாலையில்   இருச்சகர வாகனத்தில் சென்ற இளம்பெண்  சுபடீஸ்ரீ விழுந்தது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர்மீது, வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதன் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேனர் வைத்தவர் மற்றும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தர விட்டிருந்தது.

ஆனால், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேனர் அச்சடித்து கொடுத்த அச்சகத்துக்கு மட்டும் சீல் வைத்து விட்டு, பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்யாமல் கடந்த 11 நாட்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர். ஜெயகோபாலை காவல்துறை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக அதிமுகவுக்கு ஆதரவாக கொடி பிடித்து வருகிறது. ஆவடியில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்த தின பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசும்போது,  இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் விதி,  அப்போது அங்கு லாரி வந்ததும் விதி… அவர் மரணமடைந்ததும் விதி என்று அலட்சியமாக பேசினார்… மேலும்,  அதிமுக பேனர் என்பதற்காகவே அரசியல் கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன என்றும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதனை பெரிதாக்குகிறார் என்றவர், சுபஸ்ரீ மரணம் என்பது எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்துதான் எனவும் பேசியிருக்கிறார்.

பிரேமலதா பேச்சு அவரது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பொதுமக்கள், பிரேமலதாவின் பேச்சை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

சமூக வலை தளங்களிலும் அண்ணியாரின் திமீர் பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கூட்டணி கட்சி என்பதற்காக, மக்கள் விரோத நடவடிக்கைக்கு பிரேமலதா ஆதரவு கொடுத்து, சுபஸ்ரீ மரணத்தை விதி என்று திமிர்த்தனமாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணியாரின் அடடே பேச்சு… வீடியோ