காஞ்சிபுரம்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று குடும்பத்துடன் சென்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 நாட்கள் மட்டுமே தரிசனம் தனம்  காஞ்சி வரதராசப் பெருமாள் கோவிலின் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தேமுக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து அத்திவரதரை சரணடைந்தார்.  வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு மண்டபம் வரை விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் காரில் வந்து இறங்கினார். அவர்களை கோவில் ஊழியர்கள், வசந்த மண்டபம் வழியாக அழைத்துச்  சென்றனர். அங்கு அத்திவரதரை  விஜயகாந்த் தனது  குடும்பத்தினருடன் பயபக்தியுடன்  தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படம் வெற்றி பெற சிறப்பு  பூஜை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 40 வருடங்கள் கழித்து நடக்கும் இந்த வைபவத்தை தரிசிப்பது மிகவும் உன்னதமானது தெரிவித்துவிட்டு உடனே அங்கிருந்து சென்றுவிட்டனர்.