சென்னை:  மறைந்த விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது.

இதையடுத்து,  திராவிட மாடல் ஆட்சி தொடர, இணைந்து பயணிப்போம்; தே.மு.தி.க கட்சியை கூட்டணி வரவேற்று ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் உறுதி செய்து வரும் நிலையில், தே.மு.தி.க. எந்த கூட்டணிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது பெரிய இழுபறிக்கு பின்ன்னர் தே.மு.தி.க. தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டின் அரசிகளம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக தலைமை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அதே வேளையில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக பாஜக கூட்டணியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரு திராவிட கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்சி வருகிறது. இதற்கிடையில், நாம்தமிழர், விஜயின் தவெகவும் களத்தில் உள்ளது. இதனால் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

ஏற்கனவே  தி.மு.க. கூட்டணியில்  காங்கிரஸ்,  ம.தி.மு.க. வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதி செய்யப்பட்ட நிலையில்,  அதிமுக கூட்டணியில்,  அ.தி.மு.க.வின் என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அதேபோல் தேமுதிகவை இழுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பேரம் படியாததால், பிரேமலதா கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல்  நாட்களை கடத்தி வந்தார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

கூட்டணி குறித்து கட்சி கூட்டத்தில் அறிவிப்போம், பொதுக்குழுவில் அறிப்போம் என்று கூறி வந்த பிரேமலதா,  தொண்டர்கள் விருப்பப்படிதான் கூட்டணி என்று த் கூறி வந்தார். அதே சமயம், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் தே.மு.தி.க. பேரம் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் சமீபத்திய ஒரு மேடையில் தே.மு.தி.க. ஒரு கட்சியே இல்லை. ஏதாவது ஒரு பக்கம் கூட்டணி குறித்து பேச வேண்டும். இருபுறமும் பேசினால் எப்படி என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக இந்த முறை  திமுக கூட்டணியில் இன்று இணைந்துள்ளது. இன்று காலை தனது சகோதரர் சுதீஷ் உடன் சேர்ந்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியை உறுதி செய்தார்.

தேமுதிகவுக்கு இந் ததேர்தலில்  , எத்தனை தொகுதிகள் என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியது முதல், இதுவரை திமுக கூட்டணியில் சேராத நிலையில், அவரது மனைவி பிரேமலதா, முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]