கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் இருந்தே, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகப்போகின்றன என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.
தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தியபோதே, பலரும் அவரிடம், ம.ந.கூட்டணி தேவையில்லை என்று சொன்னதாக தகவல் வெளியானது. அதேபோல, தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், “தேமுதிக, தமாகா ஆகியவை போனால் போகட்டும்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாகவும் தகவல் பரவியது. இதை பிறகு வைகோ மறுத்தார்.
ஆனால், தற்போது ஒரு விசயம், தே.மு.தி.க.வின் விலகலை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது.
வரும் வரும் 24 ந்தேதி ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நடக்கிறது. இதில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தமாகா ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்பதாக அழைப்பிதழ் வெளியாகி இருக்கிறது. ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெயர் அதில் இல்லை.
இது குறித்து ம.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, “விஜயகாந்துக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால் பதிலே இல்லை. பிறகு, அக் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாவது வருவார்களா என்று கேட்டோம். அதற்கும் பதில் இல்லை. ஆகவே விஜயகாந்த் பெயர் இல்லாமலே அழைப்பிதழ் அச்சடித்துவிட்டோம்” என்றார்.
ஆக, ம.ந. கூட்டணியிலிருந்து விஜயகாந்த் விலகுவது உறுதியாகிவிட்டதாகவே தோன்றுகிறது.
தலைவர் ஜி.கே.வாசனும் கலந்து கொள்கின்றனர். ஆனால் தேமுதிக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இது பற்றி மதிமுக தரப்பில் கேட்டபோது அவங்களை கூப்பிட்டோம் ஆனால் அவர்கள் பதிலே சொல்லவில்லை, விஜயகாந்த் வரவில்லை என்றாலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரையாவது அனுப்பலாம் அதையும் செய்யவில்லை அவர்கள் ஒரு முடிவெடுத்திருக்கலாம் என்றார்.
இதன் மூலம் மக்கள் நலக்கூட்டணியை கைகழுவி தேமுதிக வெளியேறுவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் இரண்டு தரப்பிலும்.