கர்நாடக மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்க 100 கோடி ரூபாய் வழங்க கர்நாடக காங்கிரஸ் கட்சி தயார்.
Since Modi & @BSYBJP Govts have failed to vaccinate most of Karnataka months after vaccine manufacturing began,@INCKarnataka has decided we are ready to vaccinate people ourselves.
We need immediate permission to procure vaccines.#LetCongressVaccinate#Congress100CrorePlan
1/7— DK Shivakumar (@DKShivakumar) May 14, 2021
அதற்காக எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி. தொகுதி மேம்பாட்டு நிதியை தடுப்பூசி வாங்க அனுமதி அளிக்க வேண்டும்.
கர்நாடக மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை நாங்களே நேரடியாக வாங்கிக்கொள்கிறோம், தற்போது இந்த தடுப்பூசிகளை மத்திய, மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மட்டுமே நேரடியாக கொள்முதல் செய்ய முடியும், இதனை கர்நாடக காங்கிரஸ் கட்சியினரும் வாங்குவதற்கு அனுமதிப்பதன் மூலம், மோடி மற்றும் எடியூரப்பா அரசை விட வேகமாகவும் துரிதமாகவும் எங்களால் செயல்பட முடியும் என்று நிரூபிக்க முடியும்.
மோடி மற்றும் எடியூரப்பா அரசு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு காலம் தாழ்த்தி வருவதோடு, செயலற்று இருக்கிறது. மக்களை காப்பற்ற தேவையான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம் எங்களுக்கு இந்த அனுமதி மட்டும் தாருங்கள் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.