பெங்களூரு
காங்கிரஸ் கட்சி தலைமை டி கே சிவகுமார் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார் என அறிவித்துள்ளது/
கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பணியாற்றி வருகிறார். அவர் காங்கிரஸ் மாநில தலைவராகவும் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கை காங்கிரஸ் கட்சியில் பின்பற்றப்படுவதால் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து டி.கே.சிவக்குமாரை விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர்க்ள் சதீஷ் ஜார்கிகோளி, கே.என்.ராஜண்ணா உள்ளிட்டோர் கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தினர்.
இதற்கு காங்கிரஸ் மேலிடம் செவி சாய்க்காமல் வருகிற டிசம்பா் மாதம் வரை கட்சியின் மாநில தலைவராக டி.கே.சிவக்குமாரே நீடிப்பார் என்று மேலிட தலைவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.கே.சிவக்குமாரை மாற்ற கட்சி மேலிடம் விரும்பவில்லை என்று முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் பதவி சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஆளுக்கு 2½ ஆண்டுகள் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையாவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் நிறைவடைவதால் ஆட்சி தலைமையில் மாற்றம் நிகழ்வது குறித்து ஏற்கனவே காங்கிரசில் தலைவர்கள்,அமைச்சர்கள் கருத்து கூறுவது தொடர்ந்து வருகிறது.
அதே வேளையில் சித்தராமையா ஆதரவாளர்கள், அவரே முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் முதல்வர் பதவியில் டி.கே.சிவக்குமார் அமருவார் என்றும் கூறி வருகின்றனர்,. அந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை காங்கிரஸ் மேலிடம் வெளியிடவில்லை.