பெங்களுரூ:
மூக ஊடகங்களில் எந்த ஒரு கட்சி தலைவருக்கும் எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவக்குமார்.
இதில் எந்த ஒரு கட்சித் தலைவரையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதைப் பற்றி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி கே சிவகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:  “எந்த ஒரு குறிப்பிட்ட கட்சி தலைவர்களின் உடல்நலம் பற்றியோ அல்லது வேறு பிரச்சினை பற்றியோ அவதூறான அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் என்பது சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் எடுத்துக் காட்டுகின்ற ஒரு கட்சி. மற்றவர்களுக்கு கெட்டதை விரும்புவது நம் நாட்டின் கலாச்சாரத் தில் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
கட்சியில் சுயபரிசோதனை தொடங்கப்பட வேண்டும் என்று ராஜ்ய சபாவின் எம்பி ராஜிவ் சாதவ்  கூறியதை தொடர்ந்து இவருடைய இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் இதனை வியாழக்கிழமை கூட்டத்தில் தெளிவுபடுத்த உள்ளதாக ராஜிவ் சாதவ்  தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கட்சிக் கூட்டத்தில் நடக்கும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்ல விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.