டெல்லி:  பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்சூரன்ஸ் உள்பட பல பொருட்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளதுடன்,   டிவி, பிரிட்ஜ், ஏசி உள்பட வாகனங்களுக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியில் இன்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில்  இரண்டு நாள் செப்டம்பர் 3 மற்றும் ந4ந்தேதி ஆகிய நாட்கள் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய முதல் நாள் கூட்டத்தின் முடிவில் சுமார் 400 பொருட்கள் மீதான வரியை குறைத்து ஜிஎஸ்டி அமைப்பில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சீர்திருத்தத்திற்கு இக்கவுன்சில் ஒப்புதல் அளித்தன. 56வது ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின் பேசிய நிர்மலா சீதாராமன், “புதிய வரி மாற்றங்கள் அனைத்தும் செப்டம்பர் 22, 2025, நவராத்திரி முதல் நாள் முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்தார்.

அதன்படி, ஜிஎஸ்டி  இதுவரை இருந்து வந்த 4 அடுக்கு வரி விகிதத்தில் இருந்து,  தற்போது 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு விகித அமைப்புக்கு மாறுகிறது, இதனால் 12% மற்றும் 28% விகிதங்கள் நீக்கப்படுகின்றன. 5% மற்றும் 18% வரி விகிதங்கள் மட்டுமே அமலில் இருக்கும்.

 இந்த புதிய வரி விகிதங்கள்  நவராத்திரி விழா தொடங்கும் நாளான செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும்,  பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உறுதிமொழியான ஜிஎஸ்டி தீபாவளி பரிசை நிறைவேற்றும் வகையில் இருக்கும் வகையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்ட உள்ளது,. பொதுமக்கள்  தினசரி பயன்பாட்டில் இருக்கும் பல பொருட்களின் வரி விகிதங்களை பெரிதும் குறைத்து, விலையை குறைக்க வழிவகை செய்துள்ளது. இது சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழும் மக்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெல்த் மற்றும் லைப் இன்சூரன்ஸ் வரி விலக்கு

இதுநாள் வரையில் ஹெல்த் மற்றும் லைப் இன்சூரன்ஸ் மீது 18 சதவீதம் வரி இருந்த நிலையில், புதிய ஜிஎஸ்டி மாற்றத்திற்கு பின்பு 0 வரி விதிக்கப்படும். அதாவது வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

40% சிறப்பு ஜிஎஸ்டி

தீங்கு பொருட்கள் மற்றும் மிகவும் விலை உயர்ந்த பொருட்களுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி விகிதம் விதிக்கப்படும். இதில் புகையிலை பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட வகையான குளிர்பானங்களுக்கு இனி 40 சதவீத வரி விதிக்கப்படும்.

1,200 சிசி பெட்ரோல் மற்றும் 1,500 சிசி டீசல் கார்களுக்கு மேல் 40% ஜிஎஸ்டி விதிக்கப்படும், நிதி அமைச்சர் அறிவித்தார்.

1,200 சிசி மேல், 4,000 மிமீ நீளமுள்ள கார்கள், 350 சிசி மேல் மோட்டார் சைக்கிள், யாட், பிரைவேட் ஜெட் விமானங்கள் 40% ஜிஎஸ்டி விதித்தக்கப்பட்டு உள்ளது.

18% வரி: மோட்டார் சைக்கிள் மற்றும்  வீட்டு உபயோக பொருட்கள், 

350 சிசி வரை மோட்டார் சைக்கிள்,  வீட்டு உபயோக பொருட்களான ஏசி, டிஷ்வாஷர், டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸுக்கு 28% இலிருந்து 18% ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது.

EVக்களுக்கு  (மின்சார வாகனங்கள்)  5% ஜிஎஸ்டி தொடரும்

மின்சார வாகனங்கள் (EV) தற்போது இருப்பது போலவே 5% ஜிஎஸ்டி விகிதத்தில் தொடர்ந்து வரி விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி விலக்கு பெற்றுள்ள பொருட்கள் மற்றும் விவரம் 

அல்ட்ரா ஹை டெம்ப்ரேட்சர் பால், சென்னா, பன்னீர், பீட்சா ரொட்டி, காக்ரா, சப்பாத்தி, ரொட்டி பரோட்டா,  கண்டென்ஸ்டு பால், வெண்ணெய், நெய், பன்னீர், சீஸ் உணவு பொருட்கள்: மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃபிளேக்ஸ், பிஸ்கட்ஸ், சாக்லேட்ஸ், கோகோ பொருட்கள் ட்ரை ப்ரூட்ஸ் & நட்ஸ்: பாதாம், பிஸ்தா, ஹேசல்நட்ஸ், முந்திரி, பேரிட்சை உள்ளிட்ட இந்திய ரொட்டி வகைகளுக்கு வரி விலக்கு

அகல்சிடேஸ் பீட்டா, இமிக்ளூசரேஸ், எப்டாகாக் ஆல்ஃபா செயல்படுத்தப்பட்ட மறுசீரமைப்பு உறைதல் காரணி VIIa ஆகிய மருந்துகள் Onasemnogene abeparvovec, Asciminib, Mepolizumab, Pegylated Liposomal Irinotecan, Daratumumab, Daratumumab subcutaneous, Teclistamab, Amivantamab, Alectinib, Risdiplam, Obinutuzumab, Polatituzumab, Entituzumab Spesolimab, Velaglucerase Alpha, Agalsidase Alfa, Rurioctocog Alpha Pegol, Idursulphatase, Alglucosidase Alfa, Laronidase, Olipudase Alfa, Tepotinib உள்ளிட்ட மருந்துகளுக்கு வரி விலக்கு

பயிற்சி புத்தகம், வரைபட புத்தகம், ஆய்வக குறிப்பேடுகள் மற்றும் குறிப்பேடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பூசப்படாத காகிதம் மற்றும் காகிதப் பலகை மேப்,, ஹைட்ரோகிராபிக் போன்ற பிற பொருட்கள், உலக வரைபட பந்து, பென்சில், ஷார்ப்னர்ஸ், கி ரையான்ஸ், ட்ராயிங் சார்கோல்ஸ், ரைட்டிங், ட்ராயிங் சாக் தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் மீது இதுநாள் வரை விதிக்கப்பட்ட வரி அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 விவசாயம்: விதைகள் மற்றும் பயிர் ஊட்டச்சத்து போன்ற சில உள்ளீடுகள் (12% → 5%) 5 சதவிகித வரியாக குறைப்பு

டெக்ஸ்டைல் & புட்வேர்: காலணிகள் மற்றும் நெசவு பொருட்கள் பிற பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள், கட்டுமான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் 12% அல்லது 18% வரியில் இருந்து 5% அல்லது 0% வரி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 கல்வி துறை: கல்வி சேவைகள், புத்தகங்கள், learning aids 5% வரியில் இருந்து 0% வரி பால் பொருட்கள்: UHT பால் (முன்பு 5% → இப்போது முழுமையாக விலக்கு) பிற மாற்றங்கள் (5% இலக்க பிரிவு)

சர்க்கரை பொருட்கள்: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரை சிரப், டாஃபி, கேண்டி (5% விகிதம்) , சமையல் எண்ணெய், விலங்கு கொழுப்பு, edible spreads, சாசேஜஸ், மாமிச தயாரிப்புகள், மீன் பொருட்கள், மால்ட் எக்ஸ்ட்ராக்ட் அடிப்படையிலான பேக்கேஜ் உணவுகள் (5% விகிதம்)

கட்டுமான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் 12% அல்லது 18% வரியில் இருந்து 5%  ஆக குறைக்கப்படுகிறது.

ஹெல்த்கேர்: உயிர்காக்கும் மருந்துகள், உடல்நலம் சார்ந்த பொருட்கள், சில மருத்துவ சாதனங்கள் 5 மற்றும் 12% வரியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த வரி குறைப்பு காரணமாக,  பல பொருட்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. குறிப்பாக உணவு, கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த பல பொருட்கள் மீதான வரி குறைவது, அவற்றின் அணுகலை மக்களுக்கு எளிதாக்கியுள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பலன் அடைவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வட்டியில் சீர்திருத்தம் செய்ய டிரம்பின் 50% வரிவிதிப்பு தான் காரணம் என்று என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுகுறித்து பதில் அளித்து, பேசிய நிர்மலா சீதாராமன், ” அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம்” என்று தெரிவித்தார்.