டில்லி:
த்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
arun-jeitly
அதிகரித்து வரும் விலைஉயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அகவிலைப்படி மூலம்  50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதிய தாரர்கள் பயன்பெறுவர்கள்.
உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு 2016 ம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன் 7 வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட போது அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய அமைச்சரவை கூட்டத்த்திற்கு பின் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும்,  தேசிய கல்வி ஆவண காப்பகம் அமைத்து 3 மாதத்திற்குள் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக  தெரிவித்தார்.
கல்வி சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் கொண்டு வர தேசிய கல்வி ஆவண காப்பகம் அமைக்கபடுவதாக ஜெட்லி கூறினார்.