அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீபாவளி பண்டிகை வந்துவிட்டது.
நாளை தீபாவளி பண்டிகை..
இந்த வருடம் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை 29ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி பண்டிகை. அன்றைய தினம் அதிகாலை யிலேயே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து, வகை, வகையான இனிப்புகளுடன், பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாட தயாராக இருப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்… இருந்தாலும்…
நாளை கடைபிடிக்க வேண்டிய சம்பிரதாயங்கள் பற்றிய சிறு குறிப்புகள் உங்கள் பார்வைக்கு….
அதிகாலை: கங்கா ஸ்நானம்
தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணையை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்.
தரிதிரத்தை நீக்கும் குளியல் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர, தீபாவளி அன்று முதலில், அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும்.
கங்காஸ்நானம் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. அன்றைய தினம் எண்ணெய் குளியலை ‘கங்காஸ்நானம்’ என்று புனிதமாக சொல்வார்கள்.
நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தீபாவளியன்று அதிகாலையில் நீராடுவதை புனித நீராடல் என்றும், கங்கா ஸ்நானம் என்று அழைப்பது வழக்கம்.
நாம் தினமும்தான் காலையிலே குளிக்கிறோம். ஆனால், தீபாவளி அன்று காலையில் குளிப்பது புனித நீராடல் என்று அழைக்கப்படுகிறது.
காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்..
அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அதனால்தான் கங்காஸ்நானம் என்றும் புனித நீராடல் என்றும் அழைக்கப்படுகிறது.
புத்தாடை அணியும் நேரம்
காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புத்தாடை, நகை அணிய நல்ல நேரம். குரு ஓரை உடைய காலை 7 முதல் 8 மணிக்குள் சுப வேளையில் புத்தாடை, நகைகள் அணிய நல்ல நேரமாகும்.
கோ பூஜை
தீபாவளி அன்று காபி அல்லது சிற்றுண்டிக்கு உட்கொள்ளும் முன்னர் பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து தானம் செய்வதால் மூதாதையர் ஆசி் கிடைக்கும் என்பது ஐதிகம்.
விளக்கேற்றும் நேரம்
தீபம் ஏற்றி வழிபட நல்ல நேரம்: மாலை 5 முதல் 6 மணிக்குள் சுக்கிர ஹோரையில் தீபம் ஏற்றுதல்குடும்பத்திற்கு நன்மை கிடைக்கும்.
மாலையில் பிரேதாஷகாலத்தில் லட்சுமி கடாட்ம் வேண்டி, சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பூஜை அறையிலும், வீட்டு வாசலிலும் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை பயக்கும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.