சென்னை: தீபாவளி பண்டிகையை யொட்டி, சொந்த ஊர் செல்பவர்கள், ரயில்களின் முன்பதிவு இன்று  காலை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

தீபாவளியை முன்னிட்டு ரயில் பயணிகள் வசதிக்காக 120 நாள்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கிவருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நவம்பர் 9ஆம் தேதி ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. . ஆனால், முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.

நவம்பர் 9ம் தேதிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்த நிலையில், அடுத்த முன்பதிவுக்கான அட்டவணை, தெற்கு ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளது.  குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பயணம் செய்ய விரும்புவோர், ரயில் நிலைய கவுண்டர்களிலும், IRCTC இணையதளத்திலும் முன்பதிவு செய்து, பயணத்திற்கான டிக்கெட்டுகளை உறுதி செய்துகொள்ளலாம்.

இணையத்தில் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள், https://www.irctc. co.in/nget/train-search இந்த இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முன்பதிவு நாள் – பயண நாள் – பயண கிழமை

ஜூலை 12 – நவம்பர் 09 – வியாழன்

ஜூலை 13 – நவம்பர் 10 – வெள்ளி

ஜூலை 14 – நவம்பர் 11 – சனி

ஜூலை 15 – நவம்பர் 12 – ஞாயிறு

ஜூலை 16 – நவம்பர் 13 – திங்கள்

ஜூலை 17 – நவம்பர் 14 – செவ்வாய்

ஜூலை 18 – நவம்பர் 15 – புதன்