சத்யராஜின் மகள் திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவர் அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டளை மூலம், அரசு பள்ளி மாண்வர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
சில வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும்படி தனக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரதமருக்கு கடிதம் எழுதியது அனைவராலும் பாராட்டப்பட்டது .
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திவ்யா சத்யாராஜ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து திவ்யா , மு.க.ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு சாதாராணமான ஒன்று தான். நியூட்ரிஷனிஸ்ட்டாக எனது தொழில் பற்றியும், தமிழகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து வளர்ச்சி குறித்தும் தான் பேசினேன் என கூறியுள்ளார்.