சென்னை

நடிகைதிவ்ய பாரதி தனக்கும் ஜிவி பிரகாஷுக்கும் எந்த தொடர்பும் இலை எனக் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் குமார்\ கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர்.

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்துக்கு திவ்ய பாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்து திவ்ய பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

திவய பாரதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டாரியில்,

“ஜிவி பிரகாஷின் குடும்ப விவகாரத்தில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக திருமணமான ஆணுடன் இல்லை.

ஆதாரமற்ற வதந்திகளை நம்புவது என் கவனத்தை ஈர்க்கவில்லை என்று நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் மறுக்கிறேன்.

நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதை நிறுத்துங்கள். இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை”

என்று தெரிவித்துள்ளார்.