கொல்கத்தா:

விவாகரத்து பெற்ற தம்பதியரின் திருமணம் ஆகாத மகள் வாரிசு அடிப்படையிலான பணி நியமனத்திற்கு தகுதியானவர் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனி நீதிபதி இதற்கு எதிராக பிறப்பித்த உத்தரவின் மேல் முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஸ்கிதா மகத்ரே, நீதிபதிகள் தீபன்கர் தத்தா மற்றும் தபபிரதா சக்ரபர்த்தி ஆகியோர் அடங்கிய முழு அமர்வு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி விவாகரத்து செய்யப்பட்ட ஊழியரின் திருமணம் ஆகாத மகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை அளிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அந்த குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.